Marcus Reid
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019

நிகழ் (கால) தீபாவளி – சத்யா GP

10/26/2019

0 Comments

 
நான் முன்பு பணி புரிந்த நிறுவனமொன்றில் உடன் சேர்ந்து பணிபுரிந்த பெண்ணொருவர் தமக்குத் தெரிந்த பெண் ஒருவரிடம் நான் செய்யும் வியாபாரம் தொடர்பான விவரங்களைத் தெரிவித்திருக்கிறார். என்னுடைய அலைபேசி எண்ணையும் அவரிடம் தர, அந்தப் பெண்மணி என்னை அலைபேசியில் தொடர்பு கொண்டு தன் பெயர் உஷா என அறிமுகப்படுத்திக் கொண்டு மளிகைப் பொருட்கள் தொடர்பான விவரங்களைக் கேட்டறிந்தார். பட்டாசுகள் மலிவு விலையில் வாங்கித்தர முடியுமா என்றார். மேலும் தீபாவளிப் பண்டிகைக்கான தின்பண்டங்களை எப்போதும் வீட்டில் தான் செய்வதாகவும், மாதத்தை நிறைவு செய்யத் தேவைப்படும் மளிகைப் பொருட்கள், இனிப்பு உறைப்பு பலகாரங்கள் செய்யத் தேவையான அரிசி மாவு, ஜீனி, வெல்லம், பசு நெய், மரச்செக்கு எண்ணை கேன், ஹிந்துப்பு, விளக்கேற்றும் எண்ணை, மிளகாய் தூள், மிளகுத் தூள், வெண்ணெய், அமுல் மித்தாய் மேட், ஏலக்காய், முந்திரி, பாதாம், கடலை மாவு, நிலக்கடலை என சகலமும் வாங்கினார். நானும் மலிவு விலை பட்டாசுகளுக்கு ஏற்பாடு செய்தேன்.      ​
Picture
​ஐம்பது செ.மீ மத்தாப்பு, பெரிய சங்கு சக்கர பாக்கெட், ஸ்பெஷல் பூச்சட்டி டப்பா, ஸ்பெஷல் லக்ஷ்மி வெடி, இரண்டு மூன்று ஃபேன்ஸி ஐட்டங்கள்... வெடிப் பட்டியலில் இது எதுவும் கவனத்தை ஈர்க்கவில்லை. 28 வாலா (ஜெயின்ட்) 6 பாக்கெட்டுகள்... இதுவும் பெரிதாக கவனத்தை ஈர்க்கவில்லை. 10,000 வாலா – 4 டப்பா... இது தான் கவனத்தை பெரிதும் ஈர்த்தது.
 
பட்டாசு பார்ஸலை வீட்டிற்கு கொண்டு வந்து வைத்துவிட்டு அவர்களை அலைபேசியில் தொடர்பு கொண்டு விவரம் சொன்னேன். தன் கணவருக்கு வெள்ளிக்கிழமையுடன் அலுவலகம் செல்லத் தேவை இருக்காது என்றும் சனி, ஞாயிறு, திங்கள் என வரிசையாக மூன்று நாட்களுக்கு விடுமுறை என்றார்.
 
வெள்ளியன்று மாலை ஐந்து மணியளவில் அந்த கணவர் என்னிடம் அலை’பேசினார். ஆறு மணியளவில் வருவதாக சொன்னார். டிஎம்எஸ்ஸில் இருந்து அம்மா மெட்ரோவில் பயணித்து மவுண்ட் ஸ்டேஷனுக்கு வருவதாக சொன்னார். நானும் ஸ்டேஷன் வாசலில் அவருக்காக காத்திருந்தேன். வந்தார். இருவரும் இரு சக்கர வாகனத்தில் வெடி பார்ஸலை எடுக்க வீடு நோக்கி பயணமானோம்.
 
வாகனத்தில் செல்லும் போது பேசினோம். அடுத்து வாகனத்தை ஒரு கடையில் நிறுத்தி ரிலாக்ஸ் செய்யும் போது பேசினோம். மீண்டும் புறப்பட்டு வீடு செல்லும் வரை பேசினோம்.
 
இருவருக்கு இடையிலான சம்பாஷணை :
 
பரஸ்பர அறிமுகத்திற்குப் பிறகு பேச்சு சுவாரசியமாகத் தொடர்ந்தது.
 
“சார் நீங்க வருஷா வருஷம் பட்டாசு வியாபாரம் செய்றீங்களா?”
 
“இல்லை சார், நண்பர் சிவகாசி பட்டாசு விற்பனை செய்யறார், இந்த வருஷம் அதை என் ஃப்ரெண்ட் உங்க வைஃப் கிட்ட சொல்லி இருக்காங்க, என் ஃப்ரெண்ட் என்கிட்ட ப்ரொவிஷன்ஸ் வாங்கறாங்க அதை  உங்க வைஃப் கிட்ட சொல்லும் போது பட்டாசையும் சொல்லி இருக்காங்க”
 
“எப்படியோ எங்களுக்கு ஈஸியா கிடைச்சுருச்சு”
 
“எனக்கொரு டவுட் சார்”
 
“சொல்லுங்க”
 
“பட்டாசு எல்லாரும் வாங்கற மாதிரி தான் இருக்கு ஆனால் பத்தாயிரம் வாலா மட்டும் என்ன சார் மூணு? அதென்ன கணக்கு?”
 
“என் மகளுக்கொன்னு, மகனுக்கொன்னு, வைஃப்க்கு அப்புறம் எனக்கு”
 
“கணக்கு சரி சமமாவா சார்?”
 
“ஆமாங்க போன வருஷம் வரைக்கும் என் மகள் வாலா வைக்க மாட்டா, இந்த வருஷம் நானும் வைக்கறேன்னு சொன்னா, எனக்கு சந்தோஷம் தாங்கல சார்”
 
“சூப்பர் மகள், மகன் என்ன படிக்கிறாங்க சார்?
 
“மகன் எட்டாவது, மகள் ஆறாவது சார், தீபாவளிக்கு உங்க ப்ளான் என்ன சார்?”
 
“பெருசா எதுவும் கிடையாதுங்க, சிவன் கோயில் போவேன் அவ்ளோ தான் நீங்க?”
 
“உங்க ஃப்ரெண்ட் என் ஃவைஃப்க்கு நல்ல க்ளோஸ் சார், உங்களைப் பத்தி நிறைய சொல்லி இருக்காங்க, என் வைஃப்க்கும் சிவன்னா இஷ்டம், தீபாவளி அன்னிக்கு காலைல திரிசூலநாதர் கோயில் போவோம், ஈவ்னிங் கபாலீஸ்வரர், மண்டே பிகில் படத்துக்கு புக் செய்துட்டேன், அவளுக்கு ஆபீஸ் உண்டு, எனக்கு பசங்களுக்கு லீவ், அவளையும் லீவ் போட சொல்லிட்டேன்”
 
“செம செம”   
 
“மண்டே நீ ஆஃபீஸ், நாங்க மூணு பேரும் சேர்ந்து கலாய்ப்போம்னு சொல்லிக்கிட்டே இருந்தேன், லீவ் போட்டா, அப்புறம் தான் டிக்கெட் புக் பண்ணேன், அவ விஜய் ஃபேன் சார்”
 
“நீங்க”
 
“தல”
 
“அது” 
 
“என் ஃப்ரெண்ட் என்னைப் பத்தி என்ன சார் சொன்னா?”
 
“நிறைய சார், நீங்க எழுதுறது, உங்க அரசியல் பார்வை இப்படி நிறைய...”
 
“சார் ஒன்னு கவனிச்சீங்களா, நம்ம ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் பேரே கேட்டுக்கல”
 
‘அட ஆமாம் சார்”
 
“சத்யா ஜிபிங்கற பெயர்ல எழுதறதா சொல்லி கிறுக்குறேன் சார், என் நிஜப் பெயர் கணேஷ், உங்க பேரு பசங்க பேரு எல்லாம் சொல்லுங்க”
 
“பொண்ணு பேரு ஈஸ்வரி சார், பொண்ணு பிறந்தா இந்த பேர் வைக்கனும்னு ஆசை ஆனால் முதல்ல மகன் பிறந்தான், பொண்ணு பிறந்த உடனே வெச்சுட்டேன்”
 
“மகன் பேரு சார்?”
 
“உங்களுக்குப் பிடிச்ச அரசியல் தலைவரோட பெயர், எனக்கும் அவரைப் பிடிக்கும், அவர் பெயரையே வெச்சுட்டேன்”
 
“பேரை சொல்லுங்க சார்”
 
“ஜார்ஜ் ஃபெர்ணான்டஸ், செடன் மாதிரி பெரிய வண்டி ஓலா புக் பண்ணா பட்டாசு பெட்டியை ஈஸியா வெச்சுடலாம் சார்”
 
“ஆமா, சார் உங்க பேர்”
 
“ஜான்ஸன்” 

 
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் !  
0 Comments



Leave a Reply.

    Author

    Write something about yourself. No need to be fancy, just an overview.

    Archives

    October 2019

    Categories

    All

    RSS Feed

Powered by Create your own unique website with customizable templates.