Marcus Reid
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019

தீபாவளி வாழ்த்து - ஸ்ரீமதி சாந்தாதேவி, அக்குயோகா தெரபிஸ்ட், சென்னை

10/26/2019

0 Comments

 
மழைக்காலத்தில் வந்திடும் ஐப்பசியின்
சிறப்பான தீபாவளி பண்டிகை
வரும் குளிர் பனி கால நோய்த்தடுப்பின்
தொட்டுத் தொடர்ந்திடும் வாழ்வியல் பாரம்பரியம்...
 
உடற்கடிகார அடிப்படையில் நுரையீரல்
நன்கு இயங்கும் விடியற்காலை நேரத்தில்
கபமறுக்கும் குறுமிளகும் வாதமறுக்கும் பூண்டும்
பித்தமகற்றும் அரிசியும் அழகூட்டி மென்மையாக்கும்
கருவேப்பிலையும் உடல் சூடு தணிக்கும்
வெந்தயமும் கலந்து
காய்ச்சிய நல்லெண்ணெய் தேய்த்து           

Picture
உடல் வனப்பு மேம்பட நலங்குமாவும்
கூந்தல் செழுமைக்கு சிகைக்காயும் சேர்த்து
நதிகளின் நீரோட்டமெல்லாம்
கங்கையின் சங்கமமெனும் ஐதீகத்தின்படி
கங்கா ஸ்நானம் செய்ய எண்ணெய்
குளியலின் பூரணபலனிற்காக வெந்நீரில் நீராடி
உண்ணும் பலகாரங்கள் செரிமானமாகவும்
குளிர்கால நோய்கள் நெருங்கா வண்ணம் காத்திடும்
சுகமான சுக்கு மிளகு திப்பிலி ஏலம் கருப்பட்டி நெய் சேர்த்து
கிளறிய தீபாவளி லேகியம் உண்டு
 
வகை வகையான இனிப்புகளும்
புதுவிதமான பலகார பட்சணங்களுடன்
பகிர்ந்துண்டு களித்து புத்தாடை அணிகலனுடன்
சூழல் சீர்கேட்டை கவனத்தில் கொண்டு
கவனமுடன் பட்டாசுகளிலும் வானவேடிக்கைகளிலும்
மகிழ்வித்து மகிழும் அனைவருக்கும்
தீபாவளி திருநாள் வாழ்த்துகள்!

 

0 Comments



Leave a Reply.

    Author

    Write something about yourself. No need to be fancy, just an overview.

    Archives

    October 2019

    Categories

    All

    RSS Feed

Powered by Create your own unique website with customizable templates.