Marcus Reid
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019

Cinema நூலகம் – ராஜ்குமார் பார்த்திபன்

10/26/2019

0 Comments

 
சினிமாக்களுக்கும் பழிவாங்குதல் படலத்திற்கும் உள்ள தொடர்பு சினிமா தோன்றிய ஆதிப்புள்ளியிலிருந்தே உருவான ஒன்று. யோசித்துப் பார்த்தால் நாம் எல்லோரும் இதுவரையிலான நம் வாழ்வில் ஒரு சிறு பழிவாங்குதல் படலத்தையாவது நிகழ்த்தியிருப்போம். அது எந்த வடிவத்திலும் இருந்திருக்கலாம்.

அப்படியான நம் எல்லோருக்கும் தெரிந்த நமக்கு நன்கு பரீட்சயமான இந்தப் பழிவாங்குதல் உத்தியானது, 2003ல் வெளிவந்த தொன்கொரியப் படமான Old Boy யிலும் இருக்கிறது. சினிமாவில் பழிவாங்குதல் என்பது எவ்வளவு பழைய உத்தி என்பதை மேற்கண்ட வரிகளில் சொல்லிவிட்டோம் அல்லவா? பிறகு அப்படியென்ன இந்தப் படத்தில் ஸ்பெஷல் என்று நிச்சயம் ஒரு சலிப்பு இந்நேரத்துக்கு உங்களுக்கு தோன்றியிருக்கலாம். இந்தப்படத்தின் நாயகனுக்கும் வில்லனுக்கும்.... என்ன பிரச்சினை? ... இன்னொன்று, நாயகன் வில்லன் என்பதை விட இரண்டு பேர்... என்று வைத்துக்கொள்ளலாம். காரணம், வில்லன் யார் என்பதை சூழ்நிலைகளே தீர்மானிக்கிறது என்பது படத்தில் அடிக்கோடிடப்பட்ட ஒரு முக்கிய விசயம். ஓகே. இரண்டு மத்திய வயது ஆண்கள். அவர்களுக்கு இடையே நிகழ்ந்த பிரச்சினைகள் என்ன? அதில் ஒருவன் இன்னொருத்தனை எத்தனை குரூரமாக பழி தீர்த்துக் கொண்டான் என்பதே Old Boy.  
Picture
படத்தின் தொடக்க காட்சிகளே நிமிர்ந்து நோக்க வைக்கிறது. குறிப்பாய் மொட்டைமாடியில் தற்கொலை செய்துகொள்ளப் போகும் ஒருத்தனைத் தடுத்து நிறுத்தி தன் கதையை நாயகன் விவரிக்கத் தொடங்குவதில் இருக்கிற அந்த சூழல் எதிர்பார்ப்பின் ஆரம்பப் புள்ளி.
நன்றாய்க் குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்ட ஓர் இரவில் போலிஸின் பிடியிலிருக்கிற நாயகன் Oh Dae-su (Choi min sik) வை அவரது நண்பர் மீட்டுக் கொண்டு வருகிறார்.
 
அப்போதுதான் அன்று அவருடைய மகளின் பிறந்த தினம் என்பது நினைவுக்கு வருகிறது. உனக்காக ஒரு பரிசுடன் வருகிறேன் என்று தொலைபேசியில் மகளிடம் ஆசையாய்ச் சொல்லும் Oh Dae-su திடீரென்று மாயமாகிறார். விழித்துப் பார்த்தால் ஓர் அறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார். உள்ளே ஒரு தொலைக்காட்சி இருக்கிறது. நேரத்துக்கு ஒரே வகையான உணவு வருகிறது. இப்படியே நாட்கள் கழியும் போது ஒருநாள் தொலைக்காட்சியில் Oh Dae su வின் மனைவி கொல்லப்பட்டதாகவும் கொலையாளியான கணவரை போலீஸ் தேடுகிறது என்றும் செய்தி ஒளிபரப்பாகிறது.
 
அதிர்ச்சியின் உச்சத்துக்கே செல்லும் நாயகன் தன்னை அடைத்து வைத்தது யார்... ஏன்... என்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் கிடந்து தவிக்கிறார். தற்கொலைக்கு முயலும் போது அறையில் மயக்க மருந்து செலுத்தப்பட்டு தற்கொலை தடுக்கப்படுகிறது. இப்படியே பதினைந்து ஆண்டுகள் கழிகிறது.
 
ஒருநாள் Oh Dae-su திடீரென்று விடுவிக்கப்படுகிறார். பின்புதான் அந்தத் தேடல் ஆரம்பமாகிறது. யார் தன்னை இவ்வளவு காலம் ஒற்றை அறையில் அடைத்து வைத்தது? ஏன் என்று தேடி பல முயற்சிகளுக்குப் பிறகு அந்த வில்லனின் (yoo ji-tae) முன்பு போய் நிற்கிறார் நாயகன். (நம் புரிதலுக்காக நாயகன் வில்லன் என்றே குறிப்பிடுகிறேன்)  

Picture
​அப்போது அந்த வில்லன் ஐந்து நாட்களுக்குள் என்னைக் கண்டுபிடி. நானே தற்கொலை செய்து கொள்கிறேன். இல்லையென்றால் உன் நெருக்கமான தோழியை கொன்று விடுவேன் என்கிறான். ஆம். பதினைந்து வருட சிறை வாழ்க்கைக்குப் பிறகு வெளியில் வரும் நாயகனுக்கு ஹோட்டலில் பணி செய்யும் Mi-do என்ற இளம் பெண்ணுடன் (kang hye Jung) காதல் ஏற்பட்டு உடல்வரை பறிமாறிக் கொள்கிறார்கள். நாயகனுக்கு அந்தக் காதல் பெரும் ஆசுவாசமாக இருக்கிறது.
 
ரைட் நாயகன் ஐந்து நாட்களில் அவன் யாரென்று கண்டுபிடித்து அவனிடம் போய்ச் சொல்லுகிறான். அவனை தற்கொலை செய்யச் சொல்லி வலியுறுத்துகிறான். அப்போது வில்லன் ஒரு பரிசுப்பெட்டியை நாயகனிடம் கொடுக்கிறான். அதைப் பிரித்து பார்க்கும் நாயகனுக்கு பேரதிர்ச்சி. யெஸ். கத்தியில்லாமல் ரத்தமில்லாமல் தான் எவ்வளவு குரூரமாகப் பழிவாங்கப் பட்டிருக்கிறோம் என்பது நாயகனுக்குப் புரிகிறது. தீ பட்ட புழு போலத் துடிக்கிறான்.
 
வில்லனிடம் நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன் என்று தன் நாக்கை அறுத்துக் கொள்கிறான். தன் வாழ்நாள் முழுவதிலும் தன்னை பாதிக்கப் போகிற நூதனப் பழிவாங்கலில் இருந்து நாயகனால் மீள முடிந்ததா என்பதை படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
 
இப்படத்தின் நாயகன் Choi min sik பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். நடிப்பு ராட்சசன். காட்சிகளுக்காக எந்த அளவுக்கும் மெனக்கெடுபவர். படத்தில் இவர் ஒரு ஆக்டோபஸை உயிருடன் சாப்பிடும் காட்சி வருகிறது. காட்சியின் தத்ரூபத்துக்காக நிஜ ஆக்டோபஸையே உண்டிருக்கிறார். (இவர் புத்த மதம் சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது)
 
பதினைந்து வருடங்கள் எந்த சக உயிர்த் தொடர்பும் இல்லாத ஒருவர் இப்படித்தான் இருப்பார் என்பதை இயக்குனர் விளக்குகிற இடம் இது.
 
இந்தப்படத்தின் ஜீவனே க்ளைமேக்ஸ் ட்விஸ்ட்தான். அதுதான் மொத்தப்படத்தையும் தாங்குகிறது. ஒருவேளை அந்த இடத்தில் சறுக்கியிருந்தால் மொத்தப்படமும் வீழ்ந்திருக்கும்.
 
வில்லன் yoo ji-tae வும் தன் பங்கிற்கு கண்களாலேயே மிரட்டியிருப்பார். இந்த சமூகம் வகுத்த ஒழுக்க விழுமியங்களையும் நியதிகளையுமே கொண்டு நாயகனை வீழ்த்துகிற வன்மம் இவர் கண்களில் இயல்பாகவே இழையோடியிருந்தது.
 
இந்தச் சிக்கலான கதையை நேர்த்தியான திரைக்கதை ஆக்கியதில் இயக்குனர் Park chan wookன் உழைப்பு ஒவ்வொரு இடத்திலும் மிளிர்கிறது. இவர் இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் கதாசிரியராக இயக்குனராக தயாரிப்பாளராக தன் பங்கினைக் கொடுத்திருக்கிறார். குறிப்பாய் இந்த பழிவாங்குதல் வகைப் படங்கள் இவருக்கு கை வந்த கலை.
 
படத்தில் பதினைந்து வருடங்கள் கழிந்து கொண்டிருக்கிறது என்பதை அந்த ஒற்றை அறையில் இருக்கிற தொலைக்காட்சியின் செய்திகளை ஃபாஸ்ட் கட்டிங் செய்து புரிய வைத்திருப்பார்கள். அன்றைய காலகட்டத்தில் மிக புத்திசாலித்தனமான காட்சியமைப்பு இது.
 
படத்தில் நான்கு நிமிட சண்டைக்காட்சி ஒன்று இருக்கிறது. ஒரே கோணத்தில் ஒரே டேக்கில் இதைப் படம்பிடித்து அசத்தியிருப்பார்கள்.
 
இந்தப் படத்தை இந்தியாவில் நிச்சயமாய் ரீமேக் செய்ய முடியாது. ஆனாலும் இதன் கருவை மாற்றி இந்தியில் Zinda என்றொரு படம் Unofficial ஆக வெளிவந்தது. இதில் சஞ்சய் தத், ஜான் ஆபிரஹாம் போன்றோர் நடித்திருந்தார்கள்.     ​
Picture
 மேலும் இப்படம் 2013ல் ஹாலிவுட்டில் சிறுசிறு மாற்றங்களுடன் ரீமேக் செய்து வெளியிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
ஒரு மனிதனின் உச்சகட்ட வஞ்சம் என்பது இப்படத்தில் நாயகனுக்கு நிகழும் சம்பவம் என்றே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. திரும்பவும் சொல்கிறேன். இதில் நல்லவன் யார் கெட்டவன் யார் என்பதை நம்மால் முடிவு செய்யவே முடியாது. ஒழுக்கமும் இயற்கையை மீறாத வாழ்வும் நம்மை சீராக பயணிக்க வைக்கும். இதில் ஒன்றை மாற்றி யோசித்தாலும் இப்படத்தில் வில்லனுக்குத் தோன்றுவது போல உச்சகட்ட வஞ்சத்தையும் குரூரங்களையும் கட்டவிழ்த்து விடும் என்பதே இயக்குனர் நமக்குச் சொல்லும் செய்தி.
அந்த குரூரங்கள் பேராபத்துகளை நிகழ்த்தும் என்பதையும் ஆணித்தரமாக பதிவு செய்கிறது Old Boy.
 
ஒரு பழைய ஜப்பானிய காமிக்ஸின் பாதிப்பில் உருவான இந்தப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ளது.
 
குறிப்பாய் 2004ல் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் தலைசிறந்த இயக்குனர் Quentin tarantino முன்னிலையில் சிறந்த படமாக இப்படம் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.
 
படம் : Old Boy
மொழி. South Korean
நடிகர்கள் Choi min sik, Yoo ji-Tae, Kang Hye Jung...
இயக்கம் Park chan wook

  

0 Comments



Leave a Reply.

    Author

    Write something about yourself. No need to be fancy, just an overview.

    Archives

    October 2019

    Categories

    All

    RSS Feed

Powered by Create your own unique website with customizable templates.