Marcus Reid
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019

வாசிப்பனுபவம் – ஜான்ஸி ராணி

6/21/2019

0 Comments

 
தலைப்பு : பறவையின் வாசனை
ஆசிரியர் : கமலாதாஸ்
பதிப்பகம் : காலச்சுவடு

தலைப்பு : பறவையின் வாசனை
ஆசிரியர் : கமலாதாஸ்
பதிப்பகம் : காலச்சுவடு
 
1953 ~1984 வரை அவர் எழுதிய 140 கதைகளிலிருந்து படைப்பெழுச்சியின் உச்சத்தைத் தொட்ட அவரது படைப்புகளின் ஒட்டுமொத்த சித்திரத்தை முன்வைக்கும் 16 சிறுகதைகளின் தேர்ந்தெடுத்த தொகுப்பு இது.
(இக்கதைகளை மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்த நிர்மால்யா அவர்களின் குறிப்பிலிருந்து)
 
ஒன்றைப் போல் ஒன்றில்லாத கதைகள் சிலவும், ஒரு கதையின் நீட்சியெனத் தோன்றும் சில கதைகளும் என பதினாறு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு இது. ஒரு பெண்ணின் நுட்பமான மன உணர்வுகளை மையமாகக் கொண்டவை. அவற்றை படிப்பவருக்கும் கடத்தும் திறம் கொண்ட சொற்களால் பின்னப்பட்ட கதைகள்.
எனக்கு "என் கதை" வாசிப்பனுபவம் கொண்ட காரணத்தினால் பல கதைகள் அவரின் வாழ்வின் ஒரு விள்ளல் என்றே தோன்றுகிறது. சிலவற்றை சராசரியான மனநிலையோடும் சிலவற்றை அசராசரி மன உணர்வுடனும் எழுதியிருக்க வேண்டுமெனவும் நினைத்துக் கொள்கிறேன். எவ்விதமாய் புரிந்து கொள்வது என லேசான மனமயக்கம் தரும் புதிர் தன்மையோடு படைக்கப்பட்ட சில கதைகள் மீள் வாசிப்பில் வசப்படக்கூடும்.
 
பெரும்பாலான கதைகளில் மையப் பாத்திரமான அந்தப் பெண்ணிற்கு பெயரில்லை. எது நிகழ் (reality), எது மாயத் தோற்றம் (hallucination) என குழப்பம் கொள்ளும் அப்பெண்ணைப் போலவே வாசகரும் உணரக்கூடும்.
 
Logical/Illogical என அறிவு செய்யும் தர்க்கங்களையும் மீறி ஆசிரியரின் சொல்லாடல்களில் சொக்கித்தான் போகிறது மனசு. அடிநாதமாய் இருக்கும் புனைவுத் தன்மையற்றமையின் ஒரு இழை வார்த்தைகளுக்குத் தனித்த வசீகரத்தை அளித்து மிளிர வைக்கிறதென நான் நம்புகிறேன்.   ​
Picture
* காரில் ஏறி அமர்ந்தவுடன் உதிராத கண்ணீர்த் துளிகள் அவரது கண்களை வேதனைப்படுத்தின _என படிக்கும் போதே நெகிழ்ந்து நம் கண்கள் வேர்த்துப் போகுமளவிற்கு வீர்யம் – துரோகம்
 
* பயம் அவளது நெஞ்சில் ஒரு பறவையைப் போல படபடத்தது (மலைச்சரிவுகளில்)
 
* ஞாபகங்கள் நைந்த கண்ணிகளாக இருந்தன.  நான் உலகத்தின் கலங்கிய கண்ணில் ஒரு தூசியைப் போல நகர்ந்து கொண்டிருந்தேன் – வெளவால்கள் பறக்கும் போது
 
* தேன் குடிப்பதைப் போல சொட்டு சொட்டாக கண்களைத் திறந்தாள் – நீர் மாதுளையின் பூக்கள்
 
* பாம்புகள் சட்டையுரிப்பதைப் போல அனாயசமாக அவள் அம்மிணி என்கிற பெயரைக் கைவிட்டாள் (கல்யாணி)
 இப்படியாக வசியக் கண்ணியென வார்த்தைகள் அங்கங்கே நிரவிக்கிடக்கின்றன.
"பொய்கள்," "துரோகம்", "வெளியேற்றம்" ஆகிய தலைப்பிட்ட கதைகளில்
வேறு வேறு ஆண்கள்,
வேறு வேறு பின்னணி,
வேறு வேறு உரையாடல்கள்,
வேறு வேறு கதைகள்... 
 
ஆனால் மனைவிக்கு கணவனால் அளிக்கப்படும் ஒரே துரோகம்.
எத்தனை முயன்றாலும் வார்த்தைகள் ஒரு பூரண அனுபவத்தை கடத்திட முடிவதில்லை என்றே உணர்கிறேன். அதனை நீங்களே வாசித்து துய்க்க வேண்டும்.

 
0 Comments



Leave a Reply.

    Author

    Write something about yourself. No need to be fancy, just an overview.

    Archives

    June 2019

    Categories

    All

    RSS Feed

Powered by Create your own unique website with customizable templates.