Marcus Reid
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019

அடடா வோர்ல்ட் கப் – இராஜேஷ் ஜெயபிரகாஷம்

6/21/2019

0 Comments

 
* ஒருநாள் போட்டிகளில் விளையாடும் எல்லா கிரிக்கெட் வீரர்களின் கனவும் உலகக்கோப்பையை வெல்வது, சிறந்த வீரர்களாக கருதப்படும் பிரைன் லாரா, கங்குலி, டிராவிட், காலிஸ், வால்ஷ் போன்றவர்களுக்கு அந்த கனவு நனவாகவில்லை ஆனால் எந்த சர்வதேச போட்டிகளிலும் விளையாடாத வீரர் ஒருவர் உலகக் கோப்பையை வென்றிருக்கிறார். இந்தியாவின் சுனில் வல்சான், 1983 ஆம் ஆண்டு அணியில் இருந்தார், எந்த போட்டியிலும் விளையாடவில்லை, பின்பு தேசிய அணிக்காக தேர்வு செய்யப்படவும் இல்லை.
 
* 1975 ஆம் ஆண்டு இங்கிலாந்து எதிரான போட்டியில் சுனில் கவாஸ்கர் 174 பந்தில் ஆமை வேகத்தில் 36 ரன்கள் குவித்து கடும் விமர்சனத்திற்கு ஆளானார், ஆனால் அவரே 1987 உலக கோப்பையில் நியூசிலாந்து எதிராக 88 பந்தில் 103 ரன்கள் குவித்து தன் முதல் மட்டும் கடைசி ஒருநாள் சதத்தை அடித்தார்.
 
* 1975 ஆம் ஆண்டு உலக கோப்பை இறுதிப்போட்டியில் மே.இ.தீவுகளின் Roy fedricks, ஆஸ்திரேலியாவின் Dennis Lillie வீசிய பந்தில் ஹூக் ஷாட் மூலம் சிக்ஸ் அடித்தார் ஆனால் பேலன்ஸ் தவறி கால் ஸ்டெம்பில் பட, உலக கோப்பையில் முதல் Hit-wicket ஆனார் (இந்த உலக கோப்பையில் இங்கிலாந்தின் ஆர்சர் வீசிய பந்து ஸ்டெம்பில் பட்டு வீக்கெட் கீப்பர் தலை மேல பறந்து பௌண்டரி தாண்டி விழுந்தது)
 
* 1987ம் ஆண்டு உலக கோப்பையில் கிரிக்கெட் ஜெண்டில்மேன் கேம் என்று  சொல்வதற்கு ஏற்ப இரண்டு விஷயங்கள் நடந்தன.
 
இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான லீக் போட்டியில், ஆஸி வீரர் Dean Jones அடித்த பந்து எல்லை கோட்டிற்கு சென்றது, நடுவர்களுக்கு அது ஃபோரா இல்ல சிக்ஸா என்ற சந்தேகம், அங்கு பீல்டிங் செய்த ரவி சாஸ்திரியிடம் கேட்க, அவர் ஃபோர் என சொல்ல, நடுவர்களும் அதையே அறிவித்தனர். பின்னர் ஆஸி அணி முறையிட, நடுவர்கள் இந்திய கேப்டன் கபில்தேவிடம் கேட்க, அவரும் அதை சிக்ஸ் என அறிவிக்க ஒத்துக்கொண்டார். இந்தியா அந்தப் போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்றது.
 
மே.இ.தீவுகள் - பாகிஸ்தான் இடையிலான மற்றொரு லீக் போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிராக கடைசி ஓவரை வால்ஷ் வீசினார், வெற்றிக்கு பாகிஸ்தானுக்கு இரண்டு ரன் தேவைப்பட கடைசி விக்கெட் ஜோடி களத்திலிருந்தது, வால்ஷ் பந்து வீச வரும் போது Non-striker சலீம் ஜாஃபர் கீரிஸுக்கு வெளியே போக, வால்ஷ் அவரை Mankad முறையில் அவுட் வாய்ப்பு இருந்தும், அதை செய்யாமல் திரும்ப சென்றார். கடைசி பந்தில் அப்துல் காதர் இரண்டு ரன்கள் அடித்து பாகிஸ்தானுக்கு வெற்றியை பெற்று தந்தார். அந்த உலக கோப்பையில் பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறியது, மே.இ.தீவுகள் முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறாமல் லீக் சுற்றுடன் வெளியேறியது.
 
* இந்தியாவின் மொகிந்தர் அமர்நாத், இலங்கையின் அரவிந்த் டி சில்வா, ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே ஆகியோர் அரையிறுதி மற்றும் இறுதியாட்டத்தில் இரண்டிலும் ஆட்டநாயகன் விருது பெற்றவர்கள்.
இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் அதிகப்பட்சமாக 9 முறை ஆட்டநாயகன் விருதை பெற்றிருக்கிறார்.
 
* உலகக்கோப்பையின் முதல் Hat-trick ஐ இந்தியாவின் சேத்தன் ஷர்மா எடுத்தார், பின்னர் பாகிஸ்தானின் சக்லைன் முஷ்டாக், இலங்கையின் சமிந்தா வாஸ், ஆஸ்திரேலியாவின் பிரெட் லீ, இலங்கையின் மலிங்கா, மே.இ.தீவுகளின் கெமர் ரோச், இங்கிலாந்தின் ஸ்டீபன் ஃபின், தெ.ஆப்பிரிக்காவின் டுமினி ஆகியோர் இச்சாதனையை புரிந்துள்ளனார்.
 
இதில் மலிங்கா இரண்டு முறை இச்சாதனையை புரிந்துள்ளார், தெ.ஆப்பிரிக்காவிற்கு எதிராக நாலு பந்தில் நாலு விக்கெட் எடுத்துள்ளார் ஆனால் அது இலங்கைக்கு வெற்றியை தேடி தரவில்லை, ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
சமிந்தா வாஸ் வங்கதேசத்திற்கு எதிராக முதல் ஓவரின் முதல் மூன்று பந்துகளில் இச்சாதனையை புரிந்துள்ளார்.
இங்கிலாந்தின் ஸ்டீபன் ஃபின்னுக்கு ஆஸிக்கு எதிராக அவர் Hat-trick எடுத்தும், இங்கிலாந்து தோற்றது.
 
* டெஸ்ட் அந்தஸ்து பெறாத அணி முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது கென்யா. 2003 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் இச்சாதனையை அந்த அணி புரிந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக நியூசிலாந்து கென்யாவில் விளையாட மறுக்க, லீக் சுற்றில் இலங்கை, வங்கதேசத்தை வென்றது, சூப்பர் சிக்ஸில் ஜிம்பாபவேவை வென்னு அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
 
* உலகக் கோப்பையில் பங்கேற்ற அப்பா - மகன் ஜோடி டொனால்ட் பிரிங்கேல், டெரிக் பிரிங்கேல். அப்பா கிழக்கு ஆப்பிரிக்காவிற்காக 1975 உலகக்கோப்பையில் ஆட, மகன் இங்கிலாந்திற்காக 1987, 1992 உலகக் கோப்பையில் விளையாடினார்.
 
* 1992 உலகக்கோப்பையில் தான் பல மாற்றங்கள் செய்யப்பட்டது, வண்ண உடைகள் முதல் முறையாக பயன்படுத்தப்பட்டன, லீக் போட்டிகளுக்கு மாற்றாக ரவுண்ட் ராபின் முறை பயன்படுத்தப்பட்டது, வெள்ளை நிற பந்துகள் அறிமுகப்படுத்தபட்டது, முக்கியமாக முதல்முறையாக மழை காரணமாக போட்டி கைவிடப்பதும் இந்த உலகக்கோப்பையில் தான்.
 
* உலகக்கோப்பையில் அதிக சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் சச்சின் ஆறு சதத்துடன் முதலிடத்தில் இருக்கிறார்.
ரிக்கி பாண்டிங், சங்கக்காரா ஐந்து சதத்துடன் இரண்டாமிடத்தில் உள்ளனர்.
2015 உலகக்கோப்பையில் சங்கக்காரா தொடர்ச்சியாக அடித்த நாலு சதமே, ஒரு தொடரில் அடிக்கபட்ட தனி நபர் அதிக சதங்கள். மார்க் வாஹ் 1996, கங்குலி 2003, ஹேடன் 2007 என மூன்று சதம் அடித்திருக்கிறார்கள்.
 
உலகக்கோப்பையில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலிலும் சச்சின் முதலிடத்தில் 2278 ரன்களுடன் இருக்கிறார். பாண்டிங் 1743 ரன்களுடன் இரண்டாமிடத்திலும், சங்கக்காரா 1532 ரன்களுடன் முன்றாமிடத்தில் இருக்கிறார்.
 
* பந்து வீச்சில் மெக்ராத் 71 விக்கெட்டுடன் முதலிடத்தில் இருக்கிறார், முரளிதரன் 68 விக்கெட்டும், வாசிம் அக்ரம் 55 விக்கெட்டும் எடுத்து இரண்டாம், முன்றாமிடத்தில் இருக்கின்றனர்.
 
ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட் விழ்தியவர்கள் பட்டியலிலும் மெக்ராத் 26 விக்கெட்டுடன் முதலிடத்தில் இருக்கிறார், 2007 உலகக்கோப்பையில் இச்சாதனையை அவர் படைத்தார். ஒரு போட்டியின் மிகச்சிறந்த பந்துவீச்சும் அவர் வசமே, நமீபியாவிற்கு எதிராக 2007 உலகக்கோப்பையில் அவர் எடுத்த 7/15 ஒரு போட்டியின் சிறந்த பந்துவீச்சு ஆகும். இந்தியாவிற்காக ஸாகிர் கான், ஸ்ரீநாத் 42 விக்கெட்கள் விழ்த்தியுள்ளனர்.
 
* இரு வேறு நாட்டிற்காக உலகக்கோப்பையில் விளையாடியவர்கள்.
கெப்ளர் வெசில்ஸ்- ஆஸ்திரேலியா (1983), தென் ஆப்பிரிக்கா (1992)
ஆண்டர்சைன் கம்மின்ஸ் - மே.இ.தீவுகள் (1992), கனடா (2007)
ஈயன் மார்கன் - அயர்லாந்து (2007) , இங்கிலாந்து (2011-19)
எட் ஜாய்ஸ் - இங்கிலாந்து (2007), அயர்லாந்து (2011)

Picture
இதில் எட் ஜாய்ஸ் 2007 ல் இங்கிலாந்திற்காக அயர்லாந்துக்கு எதிராகவும், 2011 ல் அயர்லாந்திற்காக இங்கிலாந்துக்கு எதிராவுக்கும் விளையாடி தனிச்சிறப்பு பெற்றுள்ளார். இரு போட்டிகளிலும் அவர் பங்கேற்ற அணியே வெற்றி பெற்றது.
2011 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியில் இடம் பெற்றிருந்தாலும் மோர்கன், அயர்லாந்திற்கு எதிராக விளையாடவில்லை, விளையாடி இருந்தால் அவரும் இச்சாதனை படைத்திருப்பார் ஆனால் இரு முறையும் தோற்ற அணியில் இருந்திருப்பார்.
 
* ரிக்கி பாண்டிங், மெக்ராத், கில்கிரிஸ்ட் ஆகியோர் அதிகபட்சமாக மூன்று முறை கோப்பையை வென்றிருக்கிறார்கள்.
உலகக்கோப்பை இறுதியாட்டத்தில் ரிக்கி பாண்டிங், மெக்ராத் அதிகபட்சமாக நாலு முறை பங்கேற்றிருக்கின்றனர் ..
இங்கிலாந்தின் கிரஹம் கூச் மூன்று முறை இறுதிப் போட்டியில் பங்கேற்றாலும், ஒரு முறை கூட அவரால் வெற்றிக் கோப்பையை ருசிக்க முடியவில்லை.
ஆஸ்திரேலியாவின் லீமேன் வீரராக 1999 லும், பயிற்சியாளாராக 2015 லும் கோப்பையை வென்று தனிச்சிறப்பு பெற்றிருக்கிறார்.

 
0 Comments



Leave a Reply.

    Author

    Write something about yourself. No need to be fancy, just an overview.

    Archives

    June 2019

    Categories

    All

    RSS Feed

Powered by Create your own unique website with customizable templates.