Marcus Reid
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019

நவராத்திரி – கலைச்செல்வி ஸ்ரீனிவாஸ்

9/19/2019

1 Comment

 
நவராத்திரின்னாலே அழகழகான பொம்மைங்க, கொலு படிக்கட்டு, விதவிதமான சுண்டல் வகையறா, பட்டுப் பாவாடை சட்டை போட்ட சுட்டீஸ், மத்த நாள்ல அசால்ட்டா இருந்துட்டு அந்த பத்து நாளும் அலங்காரமா அம்சமா ஜிலுஜிலுன்னு இருக்கற பாவாடை தாவணி போட்ட தேவதைகள், அம்பாளே தரையிறங்கி நடமாடற மாதிரி மாமிகள்னு தெய்வீகக் கலவையா ஒரு சீன் கண்ணு முன்னாடி வந்துட்டு போகும்..
 
மத்த பண்டிகையெல்லாம் விட நவராத்திரி ரொம்பவே ஸ்பெஷல்.. இதுல வீட்ல இருக்கற குட்டீஸ் மொதற்கொண்டு பாட்டீஸ் வரை ஆர்வமா கலந்து களைகட்டற ஒரு கலக்கல் பண்டிகைன்னே சொல்லலாம்..
 
அமாவாசைக்கு முன்னாடியே அமர்க்களம் ஆரம்பிச்சிடும். அஞ்சறைப்பெட்டில இருக்கற சாமானை அள்ளிக்கொட்டி, முளைக்க வச்சி பார்க்ல வக்க செடிங்க ஒரு பக்கம் ரெடியாகும்.

Picture
நம்பளை கல்யாணம் செய்துக்கிட்ட வீட்டுக்காரை வாழ்க்கைல உயர வைக்கறமோ இல்லையோ நவராத்திரிக்கு முன்னாடி கண்டிப்பா உயர வச்சிடுவோம். அட. ஏணியில ஏத்தி பொம்மப்பெட்டி இறக்க, பரண்ல ஏத்தறத சொன்னேன். ஒரு வழியா பொம்மையெல்லாம் எடுத்து வைச்சப்றம் கொலு படிக்கட்டு கட்டற வைபவம் ஆரம்பிக்கும்.
 
இந்த வருஷம் என்ன புதுசா தீம் வைக்கலாம்னு ஹாலிவுட் அவெஞ்சர்ஸ் ரேஞ்சுக்கு ப்ளான் பண்ணிட்டு கடேசில அது நம்ப விசு சார் படம் மாதிரி லோ பட்ஜெட்ல ஆனா விறுவிறுப்பா வந்து நிக்கும்.
 
ஒவ்வொரு நாளும் கொலு பாக்க போறதும் கொலுவுக்கு அழைக்கப் போறதும்னு ஒரே மாதிரி ரொட்டீனா ஓடற இயந்திரகதியான வாழ்க்கை சூழல்லேந்து ஒரு அழகான மாற்றம் தானே. சிட்டில அங்கங்கே ஆளுக்கொரு திக்கா சிதறிக்கெடக்கற சொந்த பந்தங்கள இப்படித்தான் நேர்ல பாத்துக்க முடியுது.
 
அதுவும் அந்த நங்கநல்லூர் அத்தை, பாரீஸ் கார்னர் கடைங்கள்ல ஏறி எறங்கி வாங்கின அலங்கார பொருளுங்கள வச்சி வீட்டுக்குள்ள மதுரை மீனாட்சி கோயிலையும், திருப்பதியையும் தத்ரூபமா ஒவ்வொரு வருஷமும் வரவச்சிடுவாங்க.
 
அங்க போயி வண்டி கட்டிட்டு ட்ரெயின்ல பஸ்ல போறதுக்கு பதில் அவுங்க வீட்டுக்கே போயி கும்பல்ல இடிபடாம மீனாட்சியையும், பாலாஜியையும் தரிசனம் பண்ணிட்டு வந்துடலாம்.. நோ ஜருகண்டி ஜருகண்டி.
 
போன வர்ஷம் நங்கநல்லூர் போயிட்டே நாங்க அமர்நாத், கேதார்நாத் எல்லாம் பாத்தோம். அத்தை உபயம். அப்டி ஒரு கிரியேட்டிவிட்டி..
 
ஒவ்வொரு வீட்லயும் விதவிதமான தீம்ல கொலு வச்சி இருப்பாங்க. அந்த ஒன்பது நாளும் கிட்டதட்ட ஊரே திருவிழா மாதிரி கலகலன்னு இருக்கும்.
இப்படித்தான் ஒரு நாள் கொலு பாக்க வந்து பாட்டுப் பாடி வெத்தலப்பாக்கு வாங்கினுப் போனாங்க, பக்கத்து வீட்டு ஆன்ட்டி.
 
வீட்டுக்கார் சீக்ரெட் வாய்ஸ்ல விசாரிக்கிறார் "இப்ப வந்துட்டுப் போனாங்களே, அவுங்க யாரு??
 
மீ : அட தேவுடா!! பக்கத்து வீட்டுக்காரங்க. இங்க வந்து மூனு வருஷமாச்சு!
 
பக்கத்து வீட்ல யாரு இருக்காங்கன்னுக் கூட தெரியாத இந்த மெட்ரோ நகர வாழ்க்கையில ஆசுவாசப்படுத்திக்க இந்த மாதிரி பண்டிகைகள் உதவுது. ஒவ்வொருத்தருக்குள்ளயும் இருக்கற கலைநயத்தையும், இசை ஞானத்தையும் வெளில கொண்டு வந்து அவங்களுக்கு ஒரு அங்கீகாரத்தையும் சந்தோஷத்தையும் தருது. அது தான் உண்மை. சின்னச் சின்ன பரிசுகள் கொலு பாக்க வர்ற குழந்தைகளுக்கு கொடுக்கறதும், அதுங்க தனக்கு தெரிஞ்ச பாட்டு ஸ்லோகத்த சொல்றதும், பாக்கவும் கேக்கவும் அவ்வளவு அழகு.
 
இத சாக்கா வச்சிட்டு நம்ப பாரம்பரியத்த அடுத்த தலைமுறைக்கு சொல்லித்தர கலாச்சார விழாவா நவராத்திரி கொலு இருக்கு. எந்த கொண்டாட்டமா இருந்தாலும் சாப்பாடு இல்லன்னா நமக்கு சிறக்காதே!!
 
ஒவ்வொரு நாளும் விதவிதமான சுண்டல், கலந்த சாத நைவேத்யங்கள்னு அந்த காலத்துலே அந்தந்த பருவ காலத்துக்கு ஏத்த மாதிரி வடிவமைச்சி ஆரோக்கியமா வாழ வழி சொல்லியிருக்காங்க. என்ன தினமும் அதே நவரத்ன சுண்டல், சென்னா சப்பாத்தியான்னு வீட்ல சலிச்சுக்கறத காதுல வாங்காம கண்டுக்காம போயிடனும்.
 
பெண்மையைப் போற்றி புகழ் பாடற ஒரு பண்டிகைய பாகுபாடு இல்லாம
எல்லாரும் கொண்டாடறதே இந்த நவராத்திரியோட மகிமைதான்.
 
அக்கம்பக்கம் உறவுகள் பேணி பாகுபாடு பாக்காம வீட்டுக்கு வர்ற எல்லா பெண்களையும் வயது வித்தியாசம் இல்லாம கடவுளின் அம்சமா பாக்கறது இந்த விழாவுலதான்.
 
நவராத்திரியைக் கொண்டாடி வாழ்க்கைக்கு அவசியமான கல்வி, செல்வம், தைரியம்னு எல்லா அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அந்த முப்பெரும்தேவியர்கள் அனைவருக்கும் வழங்கி அருள் புரிய வேண்டுவோம். 🙏🙏

1 Comment
சா.கோபிநாத்
9/21/2019 05:49:10 am

எனக்கு தெரிஞ்சதுல இருக்கு நவராத்திரி விழா அப்படின்னா வே எங்க தெரு சும்மா அந்த பத்து நாட்களும் சும்மா ஒரு கலை விழா வந்த மாதிரியிருக்கும்,

இவன் என்னாட பத்து நாள்ன்னு சொல்றான்னு யோசிக்க வேண்டாம், நவராத்திரி முடிந்து அடுத்த நாள் மதியம் சிறப்பான விருந்து இருக்கும்,

ஓவ்வொரு வீட்லலையும் ஓவ்வொரு அழகான பொம்மைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்,
ஆனா ஒருத்தர் வீட்டுல இருங்கிற கொலு மாதிரி அடுத்தவங்க வீட்டுல இருக்காது என்னா அவ்வளோ கலைப்போட்டி இருக்கும்,

ஸ்லோகம் சொல்வது, பாட்டு, இசைக்கருவி வாசித்தல்,

கடைசியா ஒவ்வொரு வீட்டுலையும் பண்ணின்னா உணவு(பிரசாதம்) தருவாங்க, எல்லாருக்கும் மனசும் வயிறும் நிறைந்திருக்கும்,

இது நான் எட்டாம் வகுப்பு படிக்கும் வரை இப்படியே தொடர்ந்து நடந்தது,

அப்பறம் எல்லாம் மாறிவிட்டது,
முன்புபோல் இப்போ யாருமில்லை,,





Reply



Leave a Reply.

    Author

    Write something about yourself. No need to be fancy, just an overview.

    Archives

    September 2019

    Categories

    All

    RSS Feed

Powered by Create your own unique website with customizable templates.