Marcus Reid
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019

அரங்கமா நகருளானே – ராஜிவி நந்தகோபால்

9/19/2019

0 Comments

 
சூரியன் கன்னி ராசியில் இருக்கும் நாட்களைத்தான் புரட்டாசி மாதம் என்கிறோம்.
புரட்டாசி மாசம் பெருமாளுக்கு உகந்தது... புரட்டாசி மாத வழிபாடு, விரத அனுஷ்டானங்கள் குறித்து பார்ப்போம் :
 பெருமாளுக்கு புரட்டாசி சனிக்கிழமையில் விரதமிருந்து வழிபாடு செய்வது விசேஷமானது.
 துளசி இலையினால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் உகந்த விஷயம்.
பச்சரிசி மாவினால் மாவிளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்ற வேண்டும். துளசியும், மாவிளக்கும்  பூஜைக்கு படைத்த தேங்காயுமே அன்றைய விரதம் முடிக்க போதுமானது.
Picture
ஜோதிடக் கணக்கின்படி 6 வது ராசி கன்னி. கன்னியா ராசியின் மாதம் புரட்டாசி.
கன்னி ராசி என்பதால் இந்த மாதத்தின் அதிபதி புதன். புதன் மகா விஷ்ணுவின் சொரூபம் அதாவது புரட்டாசி மாதம் பெருமாளின் மாதம்.
பின்னே ஏன் புதனை விட்டு ஏன் சனிக்கிழமைகளில் விரதமிருக்கிறோம் என்பது ஆச்சர்யமாக இருக்கும். அதற்கொரு கதை உண்டு. அதை மற்றொரு தருணத்தில் பார்ப்போம்.
 
புரட்டாசி சனி விரத முறை:
விரதம் இருப்பவர்கள் சனிக்கிழமை காலையில் எழுந்து நீராடி, பெருமாள் படத்தின் முன் விளக்கேற்றி, துளசி இலை சேர்த்த தீர்த்தத்தை சொம்பில் ஊற்றி படம் முன் வைத்து வணங்க வேண்டும். அதை சிறிதளவு அருந்தி விரதம் துவங்க வேண்டும். விஷ்ணு புராணம், நாலாயிர திவ்ய பிரபந்தம், வெங்கடேச ஸ்தோத்திரம், விஷ்ணு சகஸ்ர நாமம் உள்ளிட்டவற்றை படிக்க வேண்டும்.
 
புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காக்கும் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு.
 
அதிக ஸ்லோகங்களை பாராயணம் செய்ய இயலாது போனாலும் குறைந்தபட்சம்  இந்த முக்கியமான ஸ்லோகத்தை தவறாமல் சொல்லி கோவிந்தனை துதிக்க வேண்டும்.   
 
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே
ஸம்ப்ராப்தே ஸன்னிஹிதே காலே
ஸம்ப்ராப்தே ஸன்னிஹிதே காலே
நஹி நஹி ரக்ஷதி டுக்ருங்கரணே
நஹி நஹி ரக்ஷதி டுக்ருங்கரணே
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே
 
பொருள் :
 
துதி கோவிந்தனை, துதிகோவிந்தனை ,
துதி கோவிந்தனே, மூட மனமே!
கதவினைக்காலன் தட்டிடும் நேரம்
உதவிடுமோ உந்தன் இலக்கண ஞானம்?
துதி கோவிந்தனை,
துதி கோவிந்தனை,
துதி கோவிந்தனை,
மூட மனமே!
 
புரட்டாசி மாத விரதம் இருந்து பெருமாளை சேவிப்பவர்கள் இவ்வருடமும் தொடர்ந்து அப்புனிதப் பணியைத் தொடருங்கள்.
 
இதுவரை முயற்சிக்காதவர்கள் இவ்வருடம் முதல் விநாயகரை வணங்கி பிள்ளையார் சுழி போட்டு மங்களகரமான நற்செயலைத் துவக்குவது போல் இனிதே விரத வழிபாடைத் துவக்குங்கள்.
 
ஓம் நமோ நாராயணா   
0 Comments



Leave a Reply.

    Author

    Write something about yourself. No need to be fancy, just an overview.

    Archives

    September 2019

    Categories

    All

    RSS Feed

Powered by Create your own unique website with customizable templates.