Marcus Reid
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019

ஆத்ம பலம் தா... மனோ பலம் தா... ஜான்ஸி ராணி

9/19/2019

0 Comments

 
எங்கம்மா பாக்கதான் இப்படி அமைதியா இருக்காங்க ஆனா தனி ஆளா என்னையும் தங்கச்சியையும் வளர்க்க கஷ்டப்பட்டாங்க. அப்பா எங்க சின்ன வயசுலயே போயிட்டாரு. எங்கள BE, MBA ன்னு  படிக்க வச்சு நாங்க லைஃப்ல இப்ப நல்லபடியா செட்டில் ஆகி இருக்கோம்னா அம்மாவோட வைராக்கியம்தான் காரணம். சொத்தெல்லாம் சொந்தகாரங்க தின்னுட்டாங்க. யார் தயவும் வேணாம்னு ஒரு  சின்ன பள்ளிக்கூடத்துல டீச்சரா சேர்ந்து படிப்படியா தன்னைத் தகுதிப்படுத்திட்டு ஹெட்மிஸ்ஸா ரிடையர் ஆனாங்க!
 
நான் ஸ்கூல் படிக்கும் போது நடந்தது... கூட இருந்த business partners ஏமாத்த, எதிர்பாராம பெரிய நஷ்டம் வந்து, எங்கப்பா இருந்த வீடு, சொத்து எல்லாத்தையும் வித்துட்டு கைல பத்து ரூபா கூட இல்லாத நிலைமை. அதற்குப் பிறகு மறுபடியும் from the scratch தொடங்கி சம்பாதிச்சார். கடவுள் கிருபைல இப்ப நல்லா இருக்கிறோம். சான்ஸே இல்ல... எங்கப்பாவோட வில் பவர்! 

Picture
இப்படியான உண்மைக் கதைகளை நாமும் நெருங்கிய வட்டத்தில் கேட்டு இருப்போம். நமக்கும் கூட நேர்ந்திருக்கும். சினிமா போல் சில நம்ப முடியாதவை எனினும் மன வலிமையால் நிஜத்தில் சாத்தியமானவை. ஒருவரின் வெற்றிக்கு எத்தனை காரணிகள் இருந்தாலும் இந்த mental strength  எனும் காரணி இல்லாமல் அவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது.
 
இடர்கள் இல்லாமல் வெற்றி இல்லை. அப்படி இடர்கள், தடைகள் வரும் போது, அதை எதிர் கொண்டு மேலும் பயணிக்கும் வலிமை வேண்டும்.
 
உங்களுக்கு இந்த தவளை கதை தெரிந்திருக்கும்.
 
எல்லா தவளைகளும் குழுமி இருந்தன. அவர்களுக்குள் போட்டி. ஒரு வழவழப்பான சறுக்கு மரத்தில் யார் முதலில் உச்சியைத் தொடுவது என்று. நிறைய தவளைகள் ஏறத் தொடங்கின. சுற்றி இருந்த தவளைகள் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன. பாதியை அடைவதற்குள் பல தவளைகள் சோர்ந்து போய் கீழே குதித்தன. ஒரு சிறிய தவளை நன்றாக முன்னேறிக் கொண்டிருந்தது. அதை பல தவளைகள் கிண்டல் செய்தபடி "இத்தனை பேரால முடியாதது உன்னால் மட்டும் முடியுமா எதற்கு முயற்சி செய்கிறாய் போதும் கீழே குதி" என சத்தம் போட்டபடி இருந்தன. எதற்கும் அசராமல் அது இறுதியில் உச்சியைத் தொட்டேவிட்டது.
 
அனைத்து தவளைகளும் இப்போது கைத்தட்டி "எப்படி உன்னால் வெற்றி பெற முடிந்தது?" என கேள்வி கேட்ட போது "என்ன கேட்கிறீர்கள்? எனக்கு சரியாக காதில் விழவில்லை அருகில் வந்து சத்தமாக கேளுங்கள்" என்றது.
 
ஆம். வெற்றி பெற வேண்டுமெனில் காதுகளை மூடிக் கொள்ள வேண்டும். முக்கியமாக நெகடிவாக பேசுபவர்களிடம்!
 
இலக்கு ஒன்றே கண்ணில் தெரிய வேண்டும்.
அவமானத்தையே அஸ்திவாரமாக்கிக் கொள்ள வேண்டும்.
தன்னை செவிடன் என்று நக்கல் செய்த நண்பர்களிடையே வெற்றியின் பெருமிதத்தோடு வலம் வந்தது அந்த தவளை!
 
வாழ்க்கையில் என்ன செய்யப் போகிறோம் என்ற தெளிவும், அதனை செய்வதற்கான தகுதிப்படுத்திக் கொள்ளலும், ஜாண் ஏறினால் முழம் சறுக்கும் சூழலிலும் விட்டுவிடாமல் முயற்சி செய்யும் தன்மையும், இத்துடன் எதற்காக செய்கிறோம் என்ற emotional drive தான் உறுதியுடன் முன்னேறுவதற்கான மனவலிமை தரும் முக்கிய காரணி என்று நினைக்கிறேன்.
 
முதலில் சொன்ன சம்பவத்தில் அந்த அம்மா தன் உறவினர்களிடையே "எப்பிடி இவ படிக்க வச்சுடுவா?" என்றோ, "பொண்ணுக்கு கல்யாணம் முடிச்சுடுவாளா? " என்றோ பிறர் புறம் பேச, விதவிதமாய் அவமானங்களைச் சந்தித்திருக்கக்கூடும்.
 
அதையெல்லாம் தாண்டி "என் குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சு குடுக்கனும்" என்ற emotional உத்வேகம்தான் அவரை எல்லா தடைகளுக்கு மத்தியிலும் சலிப்பில்லாமல் செயல்படுத்தத் தூண்டி இருக்க வேண்டும்.
சின்ன விதையாய் இந்த வலிமை இருந்துவிட்டால் போதும், சந்தர்ப்பம் வரும் போது தன்னை விருட்சமாய் உருவாக்கிக் கொள்ளும் அது.
 
எனக்கெல்லாம் வில்பவரே கிடையாதுங்க எப்படி வளர்த்துக்கிறது? என்று கேட்டீர்களெனில் அதற்கு
 
நேர்மைறையாக சிந்தித்தல்,
நேர்மறையான auto suggestion,
லட்சியங்களை நிர்ணயித்தல்,
உறவுகளை, உணர்வுகளை திறனோடு கையாளுதல்,
நேர்மறைக் காண் கற்பனை (positive visualization)
 
உள்ளிட்ட சில பயிற்சிகள் இருக்கின்றன.
 
அதை தேடிக் கற்றுக் கொள்ளும் விருப்பமும், கற்றுக் கொண்டதை செயலாக்கும் திறனும் உங்களின் மனவலிமைக்கு வழிகோலும்!

0 Comments



Leave a Reply.

    Author

    Write something about yourself. No need to be fancy, just an overview.

    Archives

    September 2019

    Categories

    All

    RSS Feed

Powered by Create your own unique website with customizable templates.