Marcus Reid
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019

ரெடி 1... 2...3... சந்திரயான்ஸ் - கார்த்திக் ஸ்ரீநிவாசன்

1/2/2020

0 Comments

 
சென்ற கட்டுரையில் சந்திரயான் – 2 தோல்வி என ஏன் எழுதக் கூடாது என்பதற்கான காரணிகளைப் பார்த்தோம். விக்ரம் தரையிறங்கு கலம் தோல்வி அடைந்ததற்கான காரணங்களை நிபுணர்கள் குழு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்து அது பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. பிரதமர் அலுவலகம் அதனை ஏற்ற பின் பொதுவெளியில் அவ்வறிக்கை வைக்கப்படும்.
 
இதன் நடுவே, சந்திரயான் – 3 கலத்தின் பணிகளுக்கான ஆரம்பகட்ட நிதித் தேவைகளை இந்திய அரசு ஒதுக்கி இருக்கிறது. இந்த ஆண்டு (நிதியாண்டு 2019-20) ஒதுக்கப்பட்ட 666 கோடிகளுடன் கூடுதலாக 75 கோடிகளை இஸ்ரோ கேட்டது, அது அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
 
இந்தத் திட்டம் சரிவர இயங்குமானால் வரும் நவம்பர் 2020 மாதத்தில் சந்திரயான் 3 சந்திரனில் இறங்கும் வாய்ப்புகள் உண்டு! இதில் orbiter எனப்படும் சந்திரனை சுற்றி வரும் செயற்கைக்கோள் இருக்காது, தரையிறங்கு கலமும் ஒரு ரோவரும் மட்டுமே இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.  
 
விக்ரம் தரையிறங்கு கலம் தோல்வி அடைந்த குறைபாடுகள் தொடர்புடைய விசாரணை அறிக்கை (defect investigation report) வெளிவந்த பின், அது பற்றி விரிவாகப் பார்க்கலாம். இப்போது சந்திரயான் 2 எடுத்துச் சென்ற கருவிகள் சரியாக இயங்குகின்றன என்ற தகவல்கள், சில கண்டுபிடிப்புகள் மூலம் தெரிய வருகின்றன.
 
சந்திரயான் 2 இல் உள்ள அனைத்து உபகரணங்களும் இயங்கத் தொடங்கி விட்டன, சில கருவிகள் ஆய்வுகளைத் தொடங்கி விட்டன. அனைத்து உபகரணங்களிலும் உள்ள தகவல் தொடர்பு சாதனங்கள் சரியாக இயங்குகின்றன. 
 
CLASS எனப்படும் Chandrayaan-2 Large Area Soft X-ray Spectrometer கருவி, Moon's X-ray Fluorescence (XRF) அலைக்கற்றைகளை ஆராய உள்ளது. அது, இப்போது சந்திரனின் பரப்பில் உள்ள சிலிக்கான், சோடியம், அலுமினியம் போன்ற மற்ற பல தனிமங்களை ஆராயும். மாதத்தில் 6 நாட்கள் இது குறித்தான ஆராய்ச்சியில் ஈடுபடும் – காரணம், மாதத்தில் 6 நாட்கள் தான் சந்திரன் பூமியின் வால் பகுதியைக் கடக்கும்.
 
பூமியின் வால்:
சூரியன், ஒளியுடன் பிளாஸ்மாவையும் (அணுக்கரு மையமும், எலக்ட்ரான்களும் தனித்தனியாக இருக்கும் வடிவம்) உமிழ்ந்து கொண்டே இருக்கிறது, இது சூரியக் காற்று (solar wind) எனப்படும்.
 
பிளாஸ்மா, அதாவது ஆற்றல் கொண்ட துகள்கள் (charged particles) வினாடிக்கு 100 km மற்றும் அதற்கு சற்று மேலான வேகத்தில் வரும், அது கோள்களின் வளி மண்டலத்துடன் உராய்ந்து, அங்கிருக்கும் அணுக்கள் / மூலக்கூறுகளுடன் வினை புரிந்து சில மாற்றங்களை உருவாக்கும். பூமியைப் பொறுத்தவரை, ஒரு சக்தி வாய்ந்த காந்தப் புலம் பூமியைச்‌ சுற்றி இருப்பதால், சூரியனில் இருந்து வரும் ஆற்றல் கொண்ட துகள்கள் பூமிக்குள் வராமல் பூமியின் இரு பக்கங்களிலும் சிதறடிக்கப்படும், அதே சமயம், பூமியின் காந்தப் புலம், சூரியனை நோக்கி இருக்கும் பகுதியில் அதிர்ச்சிக்கு உள்ளாகி வளைந்தும் அழுந்தியும் (அதன் பெயர் வளை-அதிர்ச்சி - bow shock), பின் பகுதியில் நீண்டும் இருக்கும். பூமியின் பின் நீண்டு இருக்கும் பகுதியில் சூரியக் காற்று படாமல் / இல்லாமல் இருக்கும், அந்த இடம் பூமியின் வால் (geo-tail) எனப்படும். 

Picture
CLASS ஆய்வு:
பூமியின் வால் பகுதியை சந்திரன் மாதத்தில் 6 நாட்கள் கடக்கும். அந்த சமயத்தில் தான், சந்திரயான் 2 இல் உள்ள CLASS கருவி இந்த ஆய்வில் இறங்கும், தனிம அணுக்கள், கலவை மூலக்கூறுகள் பற்றிய ஆய்வினை மேற்கொள்ளும். அந்த ஆய்வுகளில் சந்திரனில் இருக்கும் அணு/மூலக்கூறுகள் பற்றிய சரியான தகவல்கள் கிடைக்கும். CLASS கருவி, சூரியனில் இருந்து வரும் ஆற்றல் கொண்ட துகள்களின் செறிவு வேறுபாடுகளையும் (intensity variations) அளவிட்டு அனுப்பிக் கொண்டு இருக்கிறது.
 
ஆர்கான் (Ar) கண்டுபிடிப்பு:
சந்திரயான் 2 எடுத்துச் சென்ற Chandra’s Atmospheric Composition Explorer-2 (CHACE-2) – சந்திர வளிமண்டலக் கலவை ஆய்வுக் கருவி – சந்திரனின் பரப்புக்கு மேல் 100km உயரத்தில் ஆர்கான் 40 (Argon 40 – 40Ar) வாயு அணுக்கள் அதிகம் இருப்பதாக கண்டுபிடித்து உள்ளது.
 
சந்திர மண்ணில் ஆர்கான் இருப்பது ஏற்கனவே 1972 ஆம் ஆண்டு, அப்போலோ - 17 விண்கலத்தில் சென்றவர்கள் (கடைசியாக மனிதர்கள் சந்திரனுக்கு சென்று வந்தது அப்போதுதான்) கொண்டு வந்த துகள்களை நிறமாலைக் கருவி மூலம் ஆராய்ந்து கண்டு பிடித்தார்கள் ஆனால் சந்திரயான் 2, சந்திரனின் வளிமண்டலத்தில் 100km உயரத்தில் இந்த வாயு அணுக்கள் இருப்பதைக் கண்டு பிடித்து இருக்கிறது, மேலும் அது எப்படி அவ்வளவு உயரத்திற்கு வந்தது எனும் கருதுகோளையும் (படம் - 2) வெளியிட்டு உள்ளது. எந்தெந்த தனிமங்கள், மூலக்கூறுகள் ஒரு இடத்தில் / பொருளில் இருக்கின்றன என்பதை கண்டுபிடிக்கும் வழிமுறைகளை பிறகு விரிவாகப் பார்க்கலாம்.    ​
Picture
சந்திரனின் புறவளி மண்டலத்தில் (exosphere), மிகவும் மெல்லியதான வாயு மண்டலம் உள்ளது, மெல்லியது என சொல்லக் காரணம், அங்கு அணுக்கள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து கொள்வதோ, மோதிக் கொள்வதோ அரிது. பூமியுடன் ஒப்பிட்டால், பூமியில் கடற்கரைப் பகுதியில் காற்றில் ஒரு சதுர சென்டிமீட்டரில், அதாவது உங்கள் விரல் நகப் பகுதியின் மேற்பரப்பில் சுமார் 10^19 அணுக்கள் இருக்கும் (அதாவது 10000000000000000000 அணுக்கள்), இதே சந்திரனின் புறவளி மண்டலத்தில் அதே பரப்பில் சுமார் 10000 அணுக்கள் தான் இருக்கும்.
 
ஆர்கான் என்பது ஒரு ஓரகத் தனிமம் (isotope). ஓரகத் தனிமங்களின் இயற்பண்புகள் வேறாக இருந்தாலும், வேதிப்பண்புகள் மாறுபடாது. இவை கதிரியக்கச் சிதைவின் காரணமாக உருவாகின்றன. ஆர்கானைப் பொறுத்தவரை, இது நிலவின் அடிப்பரப்பில் இருக்கும் பொட்டாஷியம் சிதைவுற்று, அந்நிலத்தில் உள்ள வெடிப்புகள் மற்றும் அதிர்வுகளின் காரணமாக மேற்பரப்பிற்கு வந்து வளிமண்டலத்தில் சூரிய வெப்பத்தின் காரணமாக கலந்து விடுகின்றன. அது மேலும் சூரியக் காற்றின் காரணமாக அயனியாகி, இரவு நேரத்தில், மீண்டும் நிலத்தை அடைகின்றது. சந்திரனில் பகல் மற்றும் இரவில் ஆர்கானின் அடர்த்தி மாறுபாடுகள் குறித்தும் CHACE-2 ஆய்வு செய்து வருகிறது.    
 தொடரும்
0 Comments



Leave a Reply.

    Author

    Write something about yourself. No need to be fancy, just an overview.

    Archives

    January 2020

    Categories

    All

    RSS Feed

Powered by Create your own unique website with customizable templates.