Marcus Reid
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019

வாசிப்பனுபவம் : சரவணன் மாணிக்கவாசகம்

1/2/2020

0 Comments

 
விஷக்கன்னி : எஸ்.கே. பொற்றேக்காட் (மலையாளம்)
தமிழில் மொழிபெயர்த்தவர் : குறிஞ்சிவேலன்
 
எஸ்.கே. பொற்றேக்காட் - கவிஞர், நாவலாசிரியர், பயணக் கட்டுரையாளர், அறுபதுக்கு மேல் நூல்கள் எழுதிய இவர் ஒரு தேசத்தின்டே கதா என்ற நூலுக்காக சாகித்ய அகாதமி பரிசும், ஞானபீடப்பரிசும் பெற்றார். 1982 ல் மறைந்தார். இந்த நூலும் இவரது முக்கியமான நாவல்களில் ஒன்று.
 
குறிஞ்சிவேலன் - கதாசிரியர், மொழிபெயர்ப்பாளர், M T வாசுதேவன் நாயரின் இரண்டாம் இடம், பொற்றேக்காட்டின் விஷக்கன்னி உள்ளிட்ட பல நூல்களை மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.
 
விஷக்கன்னி :
நாற்பதுகளில் மத்திய திருவிதாங்கூரிலிருந்து கிருத்துவக் குடும்பங்கள் இரண்டு காரணங்களுக்காக மலபாருக்குப் புலம் பெயர்கின்றன. ஒன்று அவர்கள் மதநம்பிக்கைக்கு பங்கம் ஏற்படும் சூழல். இரண்டாவது அங்கு சென்று அவ்வப்போது இங்கே வந்து போகிறவர்கள் பெரும் பணக்காரர்களாகத் தோற்றமளிப்பது. இருக்கும் சொத்தை எல்லாம் விற்று குடும்பத்துடன் சென்றவர்களுக்கு அறிந்த நிலத்தை விட அறியாத நிலத்தில் ஆபத்து அதிகம் என்பது தெரிந்திருக்கவில்லை.
 
என் சிந்தனைகள்:
ஹெமிங்வேயின் கடலும் கிழவனும் போலவே இதுவும் மனிதனுக்கும் இயற்கைக்கும் நடக்கும் போராட்டம். இயற்கையின் அட்டூழியங்களுக்கு முன்னால் சரணடையத் தயங்கும் மனிதகுலத்தின் ஒரு கதை இந்த நாவல். எழுத்தின் Richness நம்மை காட்டுப்பகுதிக்கும், கன்னிநிலத்திற்கும் எளிதாகக் கடத்திப்போகிறது. உழைப்பையும் இயேசுவையும் மட்டுமே நம்பி தூரபிரதேசம் போகும் ஏழை விவசாயிகளுக்கு உழவைப் பார்த்திராத காட்டுநிலம் கனவுகளை விரிக்கிறது. மரியம் ஐந்நூறு ஏக்கருக்கு முதலாளி என வறட்டுஜம்பம் அடித்துக் கொள்வது அங்கு குடியேறியவர்களின் மொத்த மனநிலையின் பிரதிபலிப்பு. மாதவியை ஆசிரியர் விஷக்கன்னி என்கிறார், எனக்கென்னவோ நிலம் தான் மயக்கிப் பின் உயிர் கொல்லும் விஷக்கன்னியாகத் தோன்றுகிறது. இரத்தமும் சதையுமாய் நடமாடும் மனிதர்கள், வஞ்சனைகள், மூடநம்பிக்கைகள், சந்தர்ப்பவாதம் எல்லாம் சேர்ந்த கலவை இந்தநாவல். பொற்றேக்காட்டின் பெயரை காலத்திற்கும் சொல்ல இந்த ஒரு படைப்பே போதும். இவருடைய மற்ற புத்தகங்கள், குறிப்பாக ஒரு தேசத்தின்டே கதா தமிழிலோ, ஆங்கிலத்திலோ மொழிபெயர்க்கப்பட்டதா? தெரியவில்லை.
 
சந்தர்ப்பம் இருந்தும் மலையாளம் கற்றுக்கொள்ளாத முட்டாள்தனத்தை எத்தனை முறைதான் நொந்து கொள்வது!!
 
பிரதிக்கு, புத்தகசந்தையில் முயற்சி செய்யுங்கள்.
 
இப்பிரதி விவரங்கள் :
வெளியீடு : NBT
முதல் பதிப்பு வெளிவந்த ஆண்டு : 1991
விலை ரூ. 28/-

 
  • “வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம்” – ஃபேஸ்புக் குழுவில் வெளியான பதிவு
 
0 Comments



Leave a Reply.

    Author

    Write something about yourself. No need to be fancy, just an overview.

    Archives

    January 2020

    Categories

    All

    RSS Feed

Powered by Create your own unique website with customizable templates.