Marcus Reid
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019

வாசிப்பனுபவம் : ஸ்ரீமதி. ஜான்ஸி ராணி

1/2/2020

0 Comments

 
தலைப்பு : சரீரம்
ஆசிரியர் : நரன்
வகைமை : சிறுகதைகள்
வெளியீடு : சால்ட் பதிப்பகம்
 
எல்லா கதைகளின் சம்பவங்களையும் களைந்தால் அங்கே ஆன்மாவென "உடல்" காணக்கிடைக்கிறது என்றே நகைமுரணாக சொல்லத் தோன்றுகிறது.
 
"சரீரம்" என்ற தலைப்பைக் கண்டதும்,
 
“வெறும் காற்றடைத்த பையடா” (எந்த சித்தரின் பாடல் இது?)
 
*சீயும் மலமும் செந் நீரும் நிணமும்
சேர்ந்திடு துர்நாற்றமுடைக் குடமது(பாம்பாட்டிச் சித்தர்)
 
*உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே (திருமூலர்)
 
*விசையுறு பந்தினைப்போல்_உள்ளம்
வேண்டிய படிசெல்லும் உடல்கேட்டேன் (பாரதியார்)
 
இப்படி அத்தனை controversial வரிகளும் நினைவில் மின்னலென வந்து போனது.
 
புத்தகத்தை கையில் ஏந்தியதும் நான் ரசித்தது மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட பக்கங்களுடன், அங்கங்கே காணக்கிடைக்கும் (ஒரு மெல்லிய திடுக்கிடலை, அதிர்வை உண்டாக்கக் கூடிய) படங்கள். pen ink drawings வகை ஓவியங்கள். இவை கலை பரிமாணத்தை கூட்டுகின்றன.
 
171 பக்கங்களுடன் 12 சிறுகதைகள் கொண்ட தொகுப்பு.
 
புத்தகத்தின் கடைசி பக்கத்திலிருந்து படிக்கும் விநோத பழக்கமுண்டு எனக்கு.
நெருக்கி எழுத்துக்களை அடித்தால் ஒரே பக்கத்தில் அடங்கிவிடக்கூடும் இந்த சின்னஞ்சிறிய கதை, "இரண்டாம் உலகப்போரின் நாளில் எல்லா நாடுகளிலும் நிகழ்ந்த மிக சிறியக் கதை" இக்கடைசி கதையைத்தான் முதலில் படித்தேன். படிமங்கள் வழியே வார்த்தைகளுக்கு பல ஆழ்ந்த அர்த்தங்களை புரிந்து கொள்ள செய்யும் தனித்துவ கதை.
 
"அமரந்தா" "உடல்" என்பதின் தொடர்ச்சி போல தோற்றம் கொடுக்கக்கூடியது, ஏனெனில் அமரந்தா எனும் பெண் இரண்டு கதைகளிலும் வருகிறாள்.
 
 
"1921" untrimmed story என்ற குறிப்புடன் முடிவுறுகிறது. ஆசிரியர் அக்குறிப்பைத் தவிர்த்திருக்கலாமென நினைக்கிறேன்.
 
"வாரணாசி" படித்துக் கொண்டு செல்லும் போது, (நிறைய சினிமாக்களால் இவ்விதமானதொரு conditioning வந்திருக்கலாம்) பூரணி மழையில் நனையும் வரிகளுக்குப் பிறகு, வாசிப்பின் இடையே ஒரு பதற்றம் வந்துவிட்டது, "கடவுளே க்ளிஷேவாய் ஒரு லவ் மேக்கிங் சீன் வைக்காமல் இருக்கட்டும் கதாசிரியர்" என்று. நல்லவேளை அழகாய் அதன் மேன்மையுடன் நிறைவுறுகிறது கதை.
 
இக்கதைகள் நிதானமான வாசிப்பைக் கோருபவை. இருண்மையின் கனத்தோடு சொற்களின் அழகியலும் இணையாகப் பயணிக்கும் நடை கொண்டவை.
 
உதாரணத்திற்கு கண்களை வசீகரித்த இந்த வார்த்தைகளை சொல்லலாம்.
 
“துகள் துகளாய் கடலைக் கூவிக் கூவி அடுப்படிக்கு விற்றுக் கொண்டிருப்பான். தெருவிற்குள் அலைபோல யாவாரியின் சப்தம் எழுந்து எழுந்து அடங்கும்” (தேடல்)
 
வாசிக்கும் போதே காலுக்கடியில் அலை அடிப்பதான உணர்வுடன் கடலின் இரைச்சலை கேட்கும் பாவனை தந்தன வரிகள்.
 
"உடம்பு" என்றதும் சராசரித்தனமாய் நம் நினைவில் வருவதெது காமமும் பசியுமா?
நிர்வாணம், புலன்கள், பிறழ்வு, வலி, மரணம், தண்டனை, சபலம், சடலம், முக்தி,
போதை, பிறப்பு, உடைகள்... இத்தனை elements களையும் பின்புலமாய் வைத்து பல்வேறு மனிதர்களை ,அவர்களின் அக உளைச்சல்களை,அவர்களுடைய வாழ்க்கையின் ஒரு விள்ளலை நம் எதிரே கட்டமைக்கும் சிறுகதைகள்தான் "சரீரம்"
 

0 Comments



Leave a Reply.

    Author

    Write something about yourself. No need to be fancy, just an overview.

    Archives

    January 2020

    Categories

    All

    RSS Feed

Powered by Create your own unique website with customizable templates.