Marcus Reid
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019

கவிதைகள் பக்கம் – பாரியன்பன் நாகராஜன்

11/26/2019

0 Comments

 
கரும்பலகையில் கனிமரத்தை 
வாஞ்சையுடன் வரைந்திருக்கிறாள்
பவித்ரா குட்டி.
அவள் பார்த்துப் பார்த்து
வரைந்து முடித்த மரத்தின் கீழ் 
சில கனிகள்  
விழுந்து கிடக்கின்றன.
********
சாலையில் 
தனித்துப் பயணிக்கும் 
ரயில் பூச்சி விபத்தில்லாமல் 
எவ்வளவு தூரம் கடக்குமென்று
நீங்கள் யாரும்
யோசிக்காத வேளையில்
அதை அந்தப் பக்கமாய்
கடத்திவிட்டு வந்திருக்கிறேன் நான்.
*************

Picture
வாசித்துக் கொண்டிருந்த 
புத்தகத்தில் அடையாளத்திற்கென
இடைச்செருகலாய் வைத்திருந்த 
நூலிழையில் வெகு நேரமாய்ச் 
சிக்கிச் சிணுங்குகிறது
ஒரு சொல்.
***********
பல பருவங்கள் காத்திருந்து 
ஏமாற்றிய கனிமரத்தை
இன்னமும் நான் முழுதாய் 
நம்பிக் கொண்டுதான்
இருக்கிறேன்.

 
0 Comments



Leave a Reply.

    Author

    Write something about yourself. No need to be fancy, just an overview.

    Archives

    November 2019

    Categories

    All

    RSS Feed

Powered by Create your own unique website with customizable templates.